வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் 7 வயது சிறுமி, தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, எதிரே உள்ள வீட்டில் கட்டட வேலை செய்துகொண்டிருந்த அரவட்லா மலை கிராமத்தைச் சேர்ந்த மேஸ்திரி சிவக்குமார் என்ற வெங்கடேசன் (வயது 36), சிறுமியை அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சிவக்குமார் இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி அவனிடமிருந்து தப்பித்து தனது வீட்டுக்குள் ஓடிச் சென்று தனது தாயிடம் நடந்ததைக் கூறியிருக்கிறாள். இதையடுத்து, அப்பகுதி மக்கள் திரண்டு சென்று மேஸ்திரி சிவக்குமாரைப் பிடித்து தர்மஅடி கொடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 127 ஆண்டுகள் சிறைத் தண்டனை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/case-registered-against-construction-worker-for-sexually-harassing-young-girl-in-vellore




