தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த படங்களில் நடிக்கவும் கதைகள் கேட்டிருக்கிறார். காஜல் அகர்வால் கூறும்போது, "பொதுவாக சினிமா மீது எனக்கு ஒரு சிறிய அதிருப்தி உண்டு. நடிகர்களைக் காட்டிலும் நடிகைகளே அதிக சவால்களை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக நடிகைகளுக்கு திருமணமாகி விட்டாலே, அவர்கள் அவ்வளவுதான் என்று கருதி விடுகிறார்கள். மார்க்கெட் உயரத்தில் இருந்தாலும், திருமணமாகி விட்டாலே அவர்களை ஓரங்கட்டப் பார்க்கிறார்கள், முடக்க பார்க்கிறார்கள். அந்த நிலை மாறவேண்டும். இங்கு திறமையை எந்த அணை போட்டும் தடுக்க முடியாது. திறமையான நடிகைகள் எந்த வயதிலும் நடிக்கலாம். அதற்கு பலரையும் உதாரணமாக சொல்லமுடியும்" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actresses-face-more-challenges-than-actors-kajal-aggarwal-2




