1,562 விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி பெற்று பொது இடங்களில் 37 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. சென்னை யில் 1,562 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இவ் வாறு பூஜிக்கப்பட்ட சில சிலைகள் ஏற்கனவே கரைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் பெரும்பாலான பிரமாண்டமான விநாயகர் சிலைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலை களில் கரைக்கப்படுகின்றன. இதையொட்டி போலீசார் விரிவான ஏற்பாடு களை செய்துள்ளனர். 4 இடங்களில் கரைக்க ஏற்பாடு இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க, மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழித்த டங்களில் மட்டுமே, விநாயகர் சிலைகளை வாகனங்களில் கொண்டு சென்று அவர்களுக்குரிய சிலை கரைக்கும் இடங்களில் கரைக்கப்பட வேண்டும். சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகளை கரைப்ப தற்கு உபகரணங்கள் மட்டுமின்றி, படகுகள் உதவி கொண்டும் சிலை களை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம் புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர் கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் கள் மற்றும் டிரோன் மூலம் கண்காணித்தும், குதிரைப்படைகள் மூலம் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு கண்காணித்தும் குற்ற நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்க தக்க பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர் நிலை களில் கரைக்கவும் சென்னையில் 16,500 போலீசார், 2,000 ஊர்க்காவல் படையினர் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் நம்பிக்கை நகர் பகுதியில் இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலம் கடற்கரையை நெருங்கும் சமயத்தில் போக்குவரத்து மாற்றத்தையும் போலீசார் அமல்படுத்தி உள்ளனர். பாலவாக்கம் இந்தநிலையில் சிவசேனா சார்பில் தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்க ரணை, பல்லாவரம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு இருந்த 75-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மேளதாளத்துடன் வேன்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த விநாயகர் சிலைகள், பாலவாக்கம் பல்கலை நகர் கடலில் 2 டிராலிகள், 2 கிரேன்கள் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன. இதை யொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-in-chennai-today-arrangements-made-for-immersion-at-four-locations




