புதுடெல்லி, நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் லடாக்கை சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்று காலவரை யற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது போராட்டம் நேற்றுமுன்தினம் 21-வது நாளை எட்டியது. ஆனால் அன்று காலையில் உண்ணாவிரத பந்தலுக்கு சென்ற டெல்லி போலீசார், சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக ஆம்புலன்சில் ஏற்றி டெல்லி சப்தர்ஜங் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆஸ்பத்திரியிலும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் அவர் நரம்பு வழியாகவும், வாய் வழியாகவும் திரவங்கள் ஏற்ற மறுத்து வருவதாகவும், எந்த மருந்தையும் உட்கொள்ள மறுத்துவிட்டதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் சோனம் வாங்சுக்கை ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அவரது மனைவி கீதாஞ்சலி அங்மோ நேற்று டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந் தார். தனது கணவரின் உடல்நிலை குறித்து குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே சப்தர்ஜங் ஆஸ்பத்திரி வழங்குவதாகவும், மற்றொரு ஆஸ்பத்திரிக்கு மாற்றுவதற்கு அனுமதிக்காததால், அவரது மருத்துவ நிலை குறித்த ஒரு சுதந்திரமான சரிபார்ப்பு தடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட் டியிருந்தார். மேலும், போராட்ட களத்திலிருந்து வாங்சுக் அகற்றப்பட்டபோது அவரது முக்கிய உடல் செயல்பாடுகள் சீராக இருந்தபோதிலும், அந்த மருத்துவ சிகிச்சை ரகசியமாகவும் முற்றிலும் வெளிப்படையற்றதாகவும் இருப்பதால் சப்தர்ஜங் ஆஸ்பத்திரி மீதான நம்பிக்கை குறைந்து விட்டதாகவும் கூறியிருந்தார். இடைக்கால உத்தரவு இல்லை இந்த மனு மீது நீதிபதி மினி புஷ்கர்ணா சிறப்பு விசாரணை நடத்தினார். பின்னர் வாங்சுக் சிகிச்சையில் தலையிட விரும்பவிலலை எனக்கூறிய நீதிபதி. இந்த மனு மீது இடைக்கால உத்தரவு எதுவும் தேவையில்லை என தெரிவித்தார். வாங்சுக்கின் உடல்நிலையை சப்தர்ஜங் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவரது உடல் நலனைப் பாதிக்கும் வகையில் அவருக்கு எதிராக எந்தவிதமான பலமும் பயன்படுத்தப்பட்டதாக கூற முடியாது என்றும் தெரிவித்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள வாங்சுக்கை பார்ப்பதற்கு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு 24 மணி நேரமும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதையும் நீதிபதி சுட்டிக் காட்டினார். பின்னர் இந்த வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய அரசு, சப்தர்ஜங் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற் றும் மாநகர போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே வாங்சுக் உடல்நிலை தொடர்பாக சப்தர்ஜங் ஆஸ்பத்திரி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 'வாங்சுக்கின் முக்கிய உடல் செயல்பாடுகள் தற்போது சீராக உள்ளன. எனினும் அவரது ரத்த அளவுகள் சிறிதளவு மாற்றமடைந்துள்ளன. அவரது தற்போதைய நிலை சீராக இருந்தாலும், எந்தவொரு சிக்கல்களையும் உடனடியாகக் களைவதற்கு, தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையும், 24 மணி நேர கண்காணிப்பும் அவசியம்' என கூறப்பட்டு இருந்தது. மேலும், நீண்டகால உண்ணாவிரதத்தால் ஏற்படும் உடலியல் அழுத்தம் மற்றும் உடல்ரீதி யான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, பல்துறை நிபுணர்கள் குழுவின் நெருங்கிய கண்காணிப்பின் கீழ் அவருக்குத் தொடர்ச்சியான மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுகிறது என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில், மருத்துவமனையில் உள்ள வாங்சுக்கை அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கல்வி விவகாரங்களை எழுப்புவோம் என உறுதியளித்தால் இன்றே அவர் உண்ணாவிரதத்தை முடிப்பார் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் போராட்டம் குறித்து அவரது மனைவி கீதாஞ்சலி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனிடையே, சோனம் வாங்சுக்கை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றக் கோரி அவர் மனைவி வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட விரும்ப வில்லை என ஐகோர்ட்டு மறுத்து விட்டது. தனது மனுவை நிராகரித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, கீதாஞ்சலி மீண்டும் டெல்லி ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை அணுகியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/wangchuks-wife-makes-important-announcement-will-end-hunger-strike-today




