சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணி காரணமாக, எழும்பூ ரில் இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்திலிருந்தும். மற்ற பகுதிகளில் இருந்து எழும்பூருக்கு வரும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரம் வரையும் இயக்கப்படவுள்ளன. இந்த ரெயில் சேவைகள் ஏற்கனவே 19-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்று (20-ந்தேதி) முதல் வருகிற 26-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16865), கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20635), திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (12653) மற்றும் மங்களூரு எக்ஸ்பிரஸ் (16159) ஆகிய ரெயில்கள் நாளை (21-ந்தேதி) முதல் 25-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து புறப்படும். இதேபோல, தஞ்சாவூரிலிருந்து புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் (16866), கொல்லத்திலிருந்து புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636), மங்களூருவிலிருந்து புறப்படும் மங்களூரு எக்ஸ்பி ரஸ் (16160), சேலத்திலிருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் (22154) ஆகிய ரெயில்கள் இன்று (20-ந்தேதி) முதல் 24-ந்தேதி வரையில் எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வரை இயக்கப்படும். மேலும், திருச்சியிலிருந்து புறப்படும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (12654), மேற்கண்ட தேதியில் எழும்பூருக்கு பதிலாக மாம்பலம் வரை இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-at-egmore-4-express-trains-to-operate-from-tambaram




