துபாய், மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனையை இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா படைத்துள்ளார். இந்தியா - தாய்லாந்து மோதல் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி 160 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தாய்லாந்து அணியால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. 16.1 ஓவர்களில் வெறும் 65 ரன்களுக்கு தாய்லாந்து அணி ஆல்-அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகள் இந்த வெற்றியில் இந்திய அணியின் தீப்தி சர்மா முக்கிய பங்கு வகித்தார். அவர் 1.1 ஓவர்கள் வீசி ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் தீப்தி சர்மாவின் மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்தநிலையில், மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் படைத்தார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகள் 1. தீப்தி சர்மா (இந்தியா) - 171 2. புத்தாவோங் (தாய்லாந்து) - 170 3. இஷிம்வே (ருவாண்டா) -164 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/171-wickets-deepti-sharma-sets-a-new-world-record-in-womens-t20-cricket




