ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில தலைவர் சவுரப் பரத்வாஜ் எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் பேசியதாவது:- டெல்லி மந்திரி மன்ஜிந்தர் சிங் சிர்சா தலைமையிலான உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் பா.ஜனதா ஆளும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கார்ப்பரேஷன் இணைந்து இந்திய உணவு கழகத்திடம் மானிய விலையிலான அரிசியை கோரின. அதன் பேரில் 31 ஆயிரம் டன் அரிசி அனுப்பப்பட்டுள்ளது. இந்த மானிய விலை அரிசி டெல்லியில் உள்ள எந்தவொரு ஏழை மக்களுக்கும் சென்றடையவில்லை. அதற்கு பதிலாக அரியானாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு அதிக லாபத்துக்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த அசாம் கார்ப்பரே ஷன் வாரத்துக்கு ₹70 கோடி கமிஷன் ஈட்டியுள்ளது. வாரத்துக்கு ₹143 கோடி வீதம், 3 ஆண்டுகளில் ₹22 ஆயிரம் கோடிக்கு லாபம் ஈட்ட திட்டமி டப்பட்டு இந்த ஊழல் நடத்தப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/delhi-22000-crore-scam-involving-subsidized-rice-aam-aadmi-party-levels-allegations-against-the-bjp-government




