ஒரு காலத்தில் நிலம் வைத்திருப்பவர்தான் ஊரிலேயே பெரிய பணக்காரர். அப்புறம் கடை/ஃபேக்டரி வச்சிருக்கறவங்க கைக்கு அதிகாரம் மாறுச்சு. நம்ம அப்பா காலத்தில் 'நல்லா படி, அரசு வேலைக்குப் போ. வாழ்க்கை செட்டில் ஆயிடும்'னு சொன்னாங்க. அது அந்தக் காலத்துக்கு கரெக்ட். ஆனா, 2026-ல் பணக்காரர் ஆக புதிய விதி என்ன தெரியுமா? அது 'ஏஐ' (AI) இல்லைங்க. 'ஓனர்ஷிப்' (Ownership) அல்லது 'உரிமை' இன்னைக்கு எங்க பார்த்தாலும் ஏஐ பற்றிய பேச்சுதான். கட்டுரைகள் எழுதுது, கோடிங் போடுது, டாக்டர்களுக்குக் கூட ஹெல்ப் பண்ணுது. சுருக்கமா சொன்னா, கம்பெனிகள் ஏஐ பயன்படுத்தி கம்மியான ஆட்களை வச்சு அதிக வேலையைச் செய்யப் பழகிட்டாங்க. சரி, இதனால யாருக்கு லாபம்? கஸ்டமர்களுக்கு புது ஆப்ஷன் கிடைக்கலாம்; ஊழியர்கள் சீக்கிரம் வேலை முடிக்கலாம். ஆனா, நீண்ட காலத்துல அத்தனை லாபத்தையும் அள்ளப்போவது அந்த பிசினஸின் ஓனர்கள் தான் ஒரு விவசாயி நிலத்துக்கு ஓனர். ஒரு கடைக்காரர் கடைக்கு ஓனர். ஆனா நாம? படி -> வேலைக்குப் போ -> கஷ்டப்பட்டு உழை -> சம்பாதி. இப்படித்தான் நாம் வளர்க்கப்பட்டோம். ஆனா இதில் ஒரு பெரிய ஆபத்து இருக்கு. நாளைக்கே உங்க சம்பளம் நின்னு போனா, எத்தனை நாளைக்கு உங்களால குடும்பத்தை ஓட்ட முடியும்? ஒரு மாசமா? ஆறு மாசமா? பதில் யோசிக்கவே பயமா இருக்கா? ஏன்னா, நாம வருமானத்தை உயர்த்தின அளவுக்கு, சொத்துக்களின் உரிமையை (Assets) உயர்த்தல! ரெண்டு நண்பர்களை யோசிச்சுப் பாருங்க. ரெண்டு பேருக்கும் மாசம் 1 லட்சம் சம்பளம். ஒருத்தர் சம்பளம் கூடும்போதெல்லாம் பெரிய கார், புது ஐபோன்-னு செலவு பண்றார். இன்னொருத்தரோ, லைஃபையும் என்ஜாய் பண்ணிக்கிட்டு, சம்பளத்துல ஒரு பகுதியை மியூச்சுவல் ஃபண்ட் மூலம் இந்தியாவின் பெரிய கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு பண்றார். 20 வருஷம் கழிச்சு, முதல் ஆள்கிட்ட செலவழிச்ச நினைவுகள் மட்டும்தான் இருக்கும். ரெண்டாவது ஆள், பெரிய கம்பெனிகளின் பார்ட்-ஓனரா மாஸா உட்கார்ந்திருப்பார்! Ownership வருமானம் இன்றைக்கு சோறு போடும். ஓனர்ஷிப் நாளைய வாழ்க்கையை வாழ வைக்கும். கையில் கோடிகளே தேவையில்லை; மாசம் ஒரு சின்ன தொகையை மியூச்சுவல் ஃபண்டில் SIP முறையில் முதலீடு செய்தாலே, நீங்களும் நாட்டின் மிகப்பெரிய பிசினஸ்களின் 'பார்ட்-ஓனர்' ஆகலாம். கம்பெனி வளர வளர உங்க பணமும் வளரும்! நிதி சுதந்திரம்னா 40 வயசுல ரிட்டையர் ஆவதோ, வெளிநாட்டுக்கு டூர் போவதோ இல்லை. "நாம் தூங்கும்போதும் நமக்காக நம் பணம் உழைக்கிறது" என்ற பயமில்லாத நிம்மதிதான்! 2026-ல் ஏஐ உலகத்தை மாத்தலாம். ஆனா கேள்வி ஒன்றுதான்: நீங்க வருமானத்தை மட்டும் நம்பியிருக்கீங்களா. அல்லது சொத்துக்களுக்கு ஓனர் ஆகப் போறீங்களா? 2026-ல் நிதி சுதந்திரம் – ஏஐ யுகத்தில் செல்வத்தைப் பெருக்குவது எப்படி? - சிறப்பு ஒர்க் ஷாப் மாறிவரும் பொருளாதாரத்தில் சாதாரண முதலீட்டாளர்களும் எப்படி நீண்டகால செல்வத்தை உருவாக்கலாம்? அறிந்துகொள்ள, ஆகஸ்ட் 05, புதன் மாலை 7 மணிக்கு நடைபெறும் வெபினாரில் இன்றே இணையுங்கள்! இப்போதே முன்பதிவு செய்ய: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/personal-finance/how-you-can-become-rich-in-the-age-of-ai




