நகரி, தெலுங்கானா மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் பீம் ரெட்டி. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள அவரது வீடு உள்பட 15 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 2 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.6.40 லட்சமும் சிக்கியது. இந்த சோதனையில் பீம் ரெட்டி கைப்பட எழுதிய டைரி ஒன்றும் சிக்கியது. அதில் அவர் பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்தது தெரியவந்தது. கைது இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதற்குள் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதனையடுத்து டி.எஸ்.பி. அதிரடியாக கைது செய்யப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/deputy-superintendent-of-police-arrested-for-amassing-assets-beyond-his-means




