அனந்தநாக், தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் இடம்பெற்ற, ஜம்மு காஷ்மீரின் சாதாரண சாலையோர உணவகம் தென்னிந்தியாவிலிருந்து வரும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை தினமும் ஈர்த்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான லியோ திரைப் படத்தின் சில காட்சிகள் ஜம்மு- காஷ்மீரின் மட்டான் பகுதிக்கு அருகே உள்ள சிபார் என்ற உணவகத்தில் படம் பிடிக்கப்பட்டது. பஹல்காமில் இருந்து சுமார் 40 கி.மீ மற்றும் ஸ்ரீநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உணவகம், அமைந்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த உணவகத்திற்கு ஆர்வமாக சென்று பார்த்து வந்தனர். விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சரான நிலையில், இந்த உணவகம் தற்போது மேலும் கவனத்தை பெற்றுள்ளது. படம் வெளியானது முதலே இந்த இடத்திற்கு ரசிகர்கள் வரத் தொடங்கினாலும், தற்போது காஷ்மீருக்குச் செல்லும் தமிழ் நாட்டுசுற்றுலாப்பயணிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் தங்களின் பயணப் பட்டிய லில் இந்த'லியோகபே'வை ஒரு முக்கிய இடமாகச் சேர்த்து விடுகின்றனர். அங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான தென்னிந்திய ரசிகர்கள் குவிகின்றனர் கபே உரிமையாளராக நடித்திருக்கும் விஜய் ஸ்டைலாகத்தனது ஜாக் கெட்டைக் கழற்றும் அதே இடத்தில் நின்று புகைப்படம் எடுப்பது வரை, அவரது சில புகழ்பெற்ற காட்சிகளைமீண்டும் நினைவுகூர ரசிகர்கள் இந்த உணவகத்தில் குவிகின்றனர். தென்னிந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் காஷ்மீர்பயணத்திட்டத்தில் ஒரு தவிர்க்கமுடியாத இட மாக உருவெடுத்துள்ளது. விஜய் ஸ்டைலாக ஜாக்கெட் கழற்றும் இடம், சாண்டி மாஸ்டருடன் சண்டையிடும்பகுதி ஆகியவற்றில்நின்று ரசிகர்கள் புகைப் படங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து மகிழ்கின்றனர். லியோ ஸ்பெஷல் மெனுவா படத்தில் காட்டப்படும் புகழ்பெற்ற சாக் லேட் காபி அல்லது ஹாட் சாக்லேட் மற்றும் மெனுக்களுடன் படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்று கபே மேலாளர் சப் ஸார் அகமது லோன் தெரிவித்துள்ளார். இப்போது கபேயின் சுவர்களில் விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் லியோ திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு,அந்த இடமே ஒரு சினிமா தியேட் டர் போல காட்சியளிக்கிறது. உள்ளூர் சுற்றுலா வழி காட்டிகளும், ஓட்டுநர்களும் கூட இப்போது காஷ்மீர் வரும் சுற்றுலாப் பயணிகளை இந்த கபேவுக்கு அழைத்துச்செல்வதைக் வழக்கமாகக்கொண்டுள்ளனர். திரையில் பார்த்த இடத்தை நேரில் கண்டு ரசிக்க ரசிகர்கள் காட்டும் ஆர்வம் அந்தப் பகுதியை ஒரு முக்கிய சினிமா சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ijay-fans-invade-kashmir-roadside-restaurant




