கொழும்பு, இலங்கை யாழ்ப்பாணத்தில் 582 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் நடந்த கொடூரமான உள்நாட்டுப் போரின்போது, ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் தமிழ் மக்கள் கொன்று புதைக்கப்பட்டதாக நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த நிலையில், சமீபத்தில் கட்டுமானப் பணிகளின்போது எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து. கோர்ட்டு உத்தரவின் பேரில் அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த அகழாய்வில், செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தம் 582 மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப் பட்டுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக, மீட்கப்பட்ட எலும்புகளில் பெரும்பாலானவை பச்சிளம் குழந்தைகள் மற் றும் சிறுவர்களுடையதாகும். புதைகுழிக்குள் இருந்து குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், பால் பாட்டில்கள், பள்ளிப் பைகள் மற்றும் வளை யல்கள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு மனித எலும்புக்கூடு 2 கைகளும் நெஞ்சோடு சேர்த்து கயிறுகளால் இறுக்கமாகக் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் சித்ரவதை செய்து படுகொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்துகிறது. 1995-ம் ஆண்டு யாழ்ப்பாணம் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோது காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் உடல்களே இவை என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய இந்தப் புதைகுழி விவகாரம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/582-skeletons-discovered-in-jaffna-sri-lanka




