கோவை விமான நிலையத்தில் அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க-வினர் மீது பொய் வழக்கு போட்டு ஆளும் கட்சியினர் மிரட்ட பார்க்கின்றனர். இந்த மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இது பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கு அஞ்சாது. இது போன்ற பொய் வழக்குகளைச் சந்தித்துதான் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கத்தில் இருக்கிறோம். அ.தி.மு.க வெற்றியைத் தடுக்க இவர்கள் செய்கின்ற முயற்சி அனைத்தும் பொய்த்து போகும். பொள்ளாச்சி ஜெயராமன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அனுபவ குறைச்சல். பல கட்சி மாறி வந்தவர். இப்போது மந்திரி ஆகிவிட்டதால், அவருக்கு என்ன பேசுவது எனத் தெரியவில்லை. அ.தி.மு.க-வின் பாரம்பர்யம் பெரியது. 55 ஆண்டை இந்த இயக்கம் எட்டி இருக்கிறது. இந்த இயக்கத்தைத் தொடக்கூட முடியாது. இவர்களின் அனுபவ குறைச்சலுக்காக ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கின்றனர். தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா போன்றவர்களின் கோமாளித்தனமான, வேடிக்கையான பேச்சுக்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் சரியான பதில் கொடுக்கும். பொள்ளாச்சி ஜெயராமன் ஆதவ் அர்ஜுனா என்ன அரசியல் நிபுணரா? அவர் எத்தனை ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறார்? லாட்டரி விற்று கொண்டு இருந்த ஒருவர். அவருக்கு என்ன பெயர்? லாட்டரி மாபியா தானே? தமிழகத்தில் தொடர் மின்வெட்டு மட்டுமல்ல, தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. விதவிதமான கொலைகள், கொள்ளைகள் நடைபெறுகிறது. விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். "துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று என்னிடம் கேட்டார்"- ஆதவ் அர்ஜுனா குறித்து எடப்பாடி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/pollachi-jayaraman-lashes-out-asking-minister-aadav-arjuna-is-a-political-expert




