நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன் செய்தியாளர்களை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, செய்தியாளர்கள் `பெண்களுக்கு மட்டும் இலவசப் பேருந்து பயணத் திட்டம் வழங்கப்படுகிறது. ஆண்களுக்கும் இந்தத் திட்டம் வழங்கப்படுமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ``எங்க மச்சான்களுக்கு செலவை குறைக்கணும்னுதான் எங்க தங்கச்சிகளுக்கு இலவசப் பேருந்து திட்டத்தை கொடுத்திருக்கிறோம். குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்கள் சகோதரர்களையோ அல்லது மற்ற உறவினர்களையோ பணத்திற்காக எதிர்பாராமல் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம். இதனால் குடும்பப் பொருளாதாரச் சுமை பெருமளவு குறைந்துள்ளது. மின்சார ஏசி பேருந்துகள் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் (Speed Governors) மூலம் அரசு நிர்ணயித்த குறிப்பிட்ட வேகத்திலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன. தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், கிராமப்புறங்களையும் நகரங்களையும் இணைக்கும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். தமிழக அரசின் அனைத்துப் பேருந்துகளும் படிப்படியாகக் குளிர்சாதன (AC) வசதி கொண்ட பேருந்துகளாக மாற்றப்பட்டு வருகின்றன. ஆட்டோக்களில் கட்டண மீட்டர்கள் பொருத்தி உரிய கட்டணம் வசூலிக்கும் நடைமுறையும் விரைவாக நடைமுறைப்படுத்தப்படும்." என்றார். Nepal: "கண்முன்னே ஒரு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது” - கலங்கிய கும்பகோணம் ஏஜென்ஸி உரிமையாளர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/minister-parthiban-has-responded-to-a-question-regarding-the-free-travel-scheme-for-women




