காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ் நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ். வைத்தியநாதன் ஜி.உமாபதி, வக்கீல் பி.கருணாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து கடந்த ஜூலை 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந் தேதி வரை திறக்கப் பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் அமல்படுத்தவில்லை. பிலிகுண்டுலு அளவீட்டின்படி, ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய 9.140 டி.எம்.சி.க்கு பதிலாக 2.915 டி.எம்.சி.யும், ஜூலையில் 31.240 டி.எம்.சி.க்கு பதிலாக 0.714 டி.எம்.சி.யும், ஆகஸ்டு 9-ந் தேதி வரை 13.341 டி.எம்.சி.க்கு பதிலாக 6.757 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. ஒட்டு மொத்தமாகப் பெற வேண்டிய 53.721 டிஎம்சிக்கு பதிலாக 10.386 டிஎம்சி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/cauvery-water-dispute-tamil-nadu-government-files-additional-petition-in-the-supreme-court




