விமானத்தில் கிடைக்கும் வசதிகள். ஆனால் பயணக் கட்டணம் ₹505! கேரளாவில் இயக்கப்படும் ஒரு அரசு Volvo AC பேருந்து தற்போது இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இந்தப் பேருந்தின் வீடியோவை X தளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இந்த சேவை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) இயக்கும் இந்த Volvo AC பேருந்து, திருவனந்தபுரம் - எர்ணாகுளம் இடையே இயக்கப்படுகிறது. இதில் 36 Push-back இருக்கைகள் உள்ளன. பயணிகள் வசதியாக அமர்ந்து பயணிக்கும் வகையில் அதிக கால்வைக்கும் இடவசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனி TV திரை இருக்கிறது. அதோடு USB Charging வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பயணம் முழுவதும் High-speed Wi-Fi வசதியையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதில் இன்னொரு சுவாரஸ்யமான வசதியும் இருக்கிறது. பேருந்துக்குள்ளேயே Pantry அமைக்கப்பட்டுள்ளது. இதில் Tea, Coffee வழங்கப்படுவதுடன், Mini-fridge வசதியும் உள்ளது. நீண்ட தூரப் பயணத்தில் பயணிகளுக்கு வசதியாக பேருந்துக்குள்ளேயே Toilet வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை வசதிகளைக் கொண்ட இந்தப் பேருந்தைதான் ஹர்ஷ் கோயங்கா தனது பதிவில் கேரளாவின் “Business Class” சேவை என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேருந்து திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கப்படுகிறது. காலை 5.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பேருந்து, கொல்லம், ஆலப்புழா மற்றும் High Court வழியாகச் சென்று காலை சுமார் 9.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைகிறது. மாலை 5.30 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மீண்டும் புறப்படுகிறது. இதற்கான கட்டணம் ₹505 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Business Class’ buses now in Kerala! — Harsh Goenka (@hvgoenka) September 11, 2026 டிக்கெட்டுகளை KSRTC இணையதளம், Ente KSRTC Neo OPRS App, Booking Counter அல்லது KSRTC-யின் அங்கீகரிக்கப்பட்ட WhatsApp எண் மூலம் முன்பதிவு செய்யலாம். “Business Class” என்ற பெயருக்கு ஏற்ற வசதிகளுடன் இயங்கும் இந்தப் பேருந்து, வெறும் ₹505 கட்டணத்தில் இப்படி ஒரு பயண அனுபவத்தை வழங்குவதுதான் தற்போது இணையத்தில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் ஒரு பதிவு. கேரளாவின் இந்த பேருந்து சேவையைப் பலருக்கும் தெரிய வைத்திருக்கிறது! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/lifestyle/travel/keralas-viral-business-class-government-bus-has-wifi-tv-pantry-and-toilet




