இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை: புதன்கிழமை தமிழ் வருடம்: பராபவ தமிழ் மாதம்: ஆனி மாதம் நாள்: 24 ஆங்கில தேதி: 8 மாதம்: ஜூலை வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று பிற்பகல் 12-24 வரை ரேவதி, பின்னர் அசுவினி. திதி: இன்று காலை 08-06 வரை அஷ்டமி, பின்னர் நவமி. யோகம்: மரண யோகம். நல்ல நேரம் காலை: 09-15 – 10-15 நல்ல நேரம் மாலை: 04--45– 05-45 ராகு காலம்: மதியம் 12-00 – 01-30 எமகண்டம்: காலை 07-30 – 09-00 குளிகை: காலை 10-30 – 12-00 கௌரி நல்ல நேரம் காலை: 10-45 – 11-45 கௌரி நல்ல நேரம் மாலை: 06-30 – 07-30 சூலம்: வடக்கு சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம் இன்றைய ராசிபலன்:- மேஷம் புதிய முயற்சிகளை தைரியமாக தொடங்கும் மனநிலை உருவாகும். அலுவலகத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். குடும்பத்தில் ஒற்றுமை வலுப்பெறும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உடல்நலம் சுறுசுறுப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு ரிஷபம் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் எளிதாக நிறைவேறும். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்தவரை சந்திப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரவு தேவைக்கேற்ப இருக்கும். மாணவர்கள் விடாமுயற்சியால் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மிதுனம் உங்கள் புத்திசாலித்தனமான அணுகுமுறை அனைவரையும் கவரும். முக்கிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமையும். தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் உதவி பயனளிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனை புரிவார்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை கடகம் குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். தொழிலில் புதிய யோசனைகள் வெற்றியைத் தரும். உறவினர்களின் ஆதரவு உற்சாகம் அளிக்கும். வருமானம் சீராக இருக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். அதிர்ஷ்ட நிறம்: ரோஜா நிறம் சிம்மம் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. பணிகளில் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை அமைதியாக கையாளுங்கள். அலுவலகத்தில் பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் ஈடுபட வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: பொன் மஞ்சள் கன்னி சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். குடும்பத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் வார்த்தைகளில் நிதானம் அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இறைவழிபாடு மன அமைதியை அளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு துலாம் இன்றைய நாள் சாதகமான மாற்றங்களைத் தரும்.குடும்பத்தில் சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சு நடைபெறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வெளிநாட்டு தொடர்புகள் நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான முடிவுகள் எடுக்கப்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம் விருச்சிகம் தடைபட்டிருந்த பணிகள் மீண்டும் வேகம் பெறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உற்சாகம் தரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்ட நிறம்: செந்நிறம் தனுசு முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும் நாள். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல தகவல் கிடைக்கலாம். புதிய திட்டங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காணலாம். அதிர்ஷ்ட நிறம்: ஊதா மகரம் பணியிடத்தில் உங்கள் அனுபவத்திற்கு மதிப்பு உயரும். தொழிலில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பை அதிகரிக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் மரியாதை உயரும். அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம் கும்பம் பெண்களுக்கு எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் சாதகமாக அமையும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குடும்பத்தில் உற்சாகமான மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை மீனம் இறைநம்பிக்கை அதிகரித்து மன அமைதி கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்ட முயற்சியில் வெற்றி பெறுவார்கள்.உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/astrology/today-rasi-palan/today-rasi-palan-in-tamil-08-july-2026




