திருச்சி, அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெயிண்டர் நாயை போல தாவி தாவி ஓடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் காரைக்காலில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வந்தார். அவர் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆம்புலன்சில் இருந்து கீழே இறங்கியபோது. திடீரென அவர் நாய் போல் அங்கும். இங்குமாக தாவி தாவி ஓடினார். அப்போது அங்கிருந்த நாய் ஒன்று அவரை நோக்கி வந்து, அவருடன் விளையாடியது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். தற்போது அது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.காரைக்காலில் நாய் கடித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோன்று அவருக்கு நாய் கடித்ததால் இதுபோன்ற விபரீதம் ஏற்பட்டுள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-painter-who-came-to-the-government-hospital-jumped-and-ran-like-a-dog-causing-a-stir




