சிறிய அளவில் இருந்தாலும், ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களில் ராஸ்பெர்ரி முக்கியமானது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் இருப்பதால், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ராஸ்பெர்ரியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. மேலும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. இந்தப் பழத்தில் பாலிபினால்கள் (Polyphenols) எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரெஸ்ஸைக் குறைத்து, செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. ராஸ்பெர்ரி இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. இதில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதய நோய்களின் அபாயம் குறைய வாய்ப்புள்ளது. தாமிரம், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் இதில் இருப்பதால், சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக உதவுகிறது. இதன் மூலம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் சீராகக் கிடைக்க உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இதனால் அதிகமாக சாப்பிடும் பழக்கம் குறைந்து, உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும். ராஸ்பெர்ரியில் உள்ள வைட்டமின் A மற்றும் வைட்டமின் C கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. கண் உலர்வைக் குறைத்து, பார்வைத் திறனை பராமரிக்கவும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதே நேரத்தில், சரும செல்கள் புதுப்பிக்கப்படுவதையும் சேதமடைந்த திசுக்கள் சரியாகுவதையும் ஊக்குவிப்பதால், சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ராஸ்பெர்ரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாவரச் சேர்மங்கள் சில வகை புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் பங்கு வகிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், ராஸ்பெர்ரியை ஒரு தனி மருந்தாகக் கருதாமல், சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக அளவோடு சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/amazing-benefits-of-raspberries-eating-them-daily-offers-manifold-benefits-to-the-body




