நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் பிரத்தியேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நேற்றைய தினம் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் பற்றி பகிர்ந்துகொண்டனர். Ramayana Movie நடிகை சாய் பல்லவி பேசுகையில், "நடிகர்களுக்கு இது போன்ற கதாபாத்திரங்கள் கிடைப்பது எளிதான விஷயம் அல்ல. ஒரு தெய்வத்தின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது அத்தனை சுலபமல்ல. அந்தப் படைப்பை மிகச் சிறந்த வடிவமாக மாற்றுவதற்குத் தங்களின் இதயத்தையும் ஆன்மாவையும் அர்ப்பணித்து உழைக்கும் ஒரு குழு கண்டிப்பாகத் தேவை. சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு எழுதி வைத்துக்கொண்டு நடிக்கவில்லை. நான் அமைதியாக அமர்ந்து தியானம் செய்யும்போது, 'சீதை அம்மா, நீங்கள் என் மூலமாகச் செயல்படுங்கள். என் வழியாக வெளிப்படும் நடிப்பு எதுவாக இருந்தாலும், அது இந்தத் திரைப்படத்திற்காக நீங்கள் விரும்புவதாகவே இருக்கட்டும்' என்று வேண்டிக்கொள்வேன்" என்றார். சாய் பல்லவி இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்க, சீதையாகச் சாய் பல்லவி, ராவணனாக யஷ், அனுமாராகச் சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே, சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டுத் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/bollywood/ramayana-trailer-screening-bharat-mandapam-sai-pallavi-goddess-sita-speech




