திருப்பூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட் டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). இவர், பல்லடம் ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட மல்லேகவுண்டம்பாளையம் கிராம ஊராட்சியின் செயலராக உள்ளார். நேற்று இவர், ஊராட்சி அலுவலகத்துக்கு பணிக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. ஊராட்சி அலுவலகத்தில் வரி செலுத்த வந்த பொதுமக்கள் சிலர் இதை கவனித்தனர். இதையடுத்து அவர்கள் ஊராட்சி செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாகவட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரசீதா பேகத்தை அனுப்பி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். அவர் நடத்திய விசாரணையில், ஊராட்சி செயலர் ராஜேந்திரன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையிலும் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊராட்சி செயலர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-panchayat-secretary-suspended-for-reporting-to-work-drunk




