மும்பையில் டிவி தொடர்கள், வெப்சீரியஸ்களில் நடித்து வருபவர் அந்தரா பானர்ஜி(31). மும்பை அருகில் உள்ள தானேயில் வசிக்கும் அந்தரா பானர்ஜி, பாந்த்ரா-கங்காநகர் ஆரவலி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெப் சீரிஸ் ஒன்றின் படப்பிடிப்பிற்காக சூரத்துக்குச் சென்று கொண்டிருந்தார். ஒரு பயணி முன்பதிவு செய்யப்பட்ட ஏ.சி. இருக்கையில் அமர்ந்திருந்த பானர்ஜியை அதிலிருந்து காலி செய்யும்படி சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மறுத்ததை அடுத்து, பயணி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகரை அழைத்தார். அவர்கள் வந்து பானர்ஜியை அங்கிருந்து காலி செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அதோடு பானர்ஜியிடம் இருந்த டிக்கெட்டை சோதித்து பார்த்தபோது அது சிலீப்பர் பெட்டியில் பயணம் செய்வதற்கு எடுக்கப்பட்ட டிக்கெட் என்று தெரிய வந்தது. அப்படி இருந்தும் பானர்ஜி ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதோடு தனது ஆடைகளை தானே அவிழ்த்து, டிக்கெட் பரிசோதகரையும், ஆர்பிஎப் பணியாளர்களையும் ரேசர் பிளேடால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் உறவினர்கள் அல்லது சட்ட ஆலோசகரை தொடர்பு கொள்ள அதிகாரிகள் பரிந்துரைத்தபோது, அவர் ஒத்துழைக்க மறுத்து, கைது செய்ய வலியுறுத்தினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த வாக்குவாதத்தால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு அவர் அமைதியடைந்தார். இது குறித்து ரயில்வே பாதுகாப்புப்படை மூத்த இன்ஸ்பெக்டர் பந்த்ரிநாத் காண்டே கூறுகையில், பானர்ஜி பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல், பொது ஊழியர்களுக்கு கடுமையான தீங்கு விளைவித்தல், தாக்குதல் மற்றும் வேண்டுமென்றே அவமதித்ததற்காக கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்''என்றார் ஆடையை அவிழ்த்து ரகளை ஏசி கோச்சின் டிக்கெட் கிடைக்காததால் சிலீப்பர் கிளாஸ் டிக்கெட்டுடன் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்தார். இரவு 9.30 மணி முதல் 10.50 மணி வரை இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பானர்ஜி மீது புகார் செய்த ரயில்வே போலீஸ் அதிகாரி, யாமினி காந்த் மிஸ்ரா கொடுத்துள்ள புகாரின் படி, முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையை காலி செய்ய பானர்ஜி மறுத்ததைப் பற்றி டிசி ஹரிகேஷ் திரிபாதி மற்றும் சக பயணி ஆகியோர் கான்ஸ்டபிள் ராஜேஷ்குமாரிடம் தெரிவித்தனர். பானர்ஜியை அமைதிப்படுத்த முயற்சித்தேன். ஆனால் பானர்ஜி தனது ஆடைகளை அவிழ்த்து ஆக்ரோஷமாக மாறினார், ரேசர் பிளேடால் மிஸ்ரா, டிசி மற்றும் தனக்கு காயங்களை ஏற்படுத்தினார். கைகலப்பின் போது எனது சீருடை, கைபேசி மற்றும் கண்ணாடி சேதமடைந்தது என்று மிஸ்ரா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் குளிரூட்டப்பட்ட பெட்டியின் கதவுகளைப் பூட்டினர். தப்பிப்பதற்காக பானர்ஜி கண்ணாடியை உடைத்தார், ரயில் தஹானுவை அடைந்ததும் அவர் ரயில்வே பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/traveling-in-ac-with-a-sleeper-ticket-actress-attacks-railway-tc-and-security-guard-with-a-blade-after-being-questioned




