வேலூர், வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரை சேர்ந்தவர் சேகர் (வயது 63) நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (60) நேற்று முன்தினம் வேலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே உள்ள அமரம்பேடு பகுதியை கடந்து செல்லும் போது மழை பெய்ததால் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றனர். மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் மழைக்கு ஒதுங்கி நின்ற கணவன்-மனைவி அருகே வந்து முகவரி கேட்பது போல் கேட்டு தனலட்சுமி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார். இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-woman-snatches-3-sovereign-gold-chain-while-pretending-to-ask-for-address




