கனடா, வலுவான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கி உலகின் அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது என்று கனடாவின் டொராண்டோவில் நடந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். கனடா பயணம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக கனடா சென்றார். முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தின் ஒருபகுதியாக டொராண்டோவில் நடந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து அங்குள்ள பெரும் முதலீட்டாளர்கள், இந்திய வணிக சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் பேசினார். அப்போது அவர் வலுவான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கி உலகின் அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: புதிய வாய்ப்புகள் இந்தியா இப்போது உலகின் அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இது அளவுகோல், நிலையான வளர்ச்சி, இளம் மக்கள் தொகை, விரிவடையும் நுகர்வு மற்றும் வேகமாக ஆழமடைந்து வரும் மூலதனச் சந்தைகள் ஆகியவற்றின் கலவையை வழங்குகிறது. நீண்ட கால நோக்கம் கொண்ட முதலீட்டாளர்களுக்கு, இந்தியா ஈடுசெய்ய முடியாத ஒரு கலவையை வழங்குகிறது. இந்தியாவின் மாற்றம் கட்டமைப்பு ரீதியானது, இது விரைவான நகரமயமாக்கல், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. இவை பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இந்தியா-கனடா உறவு நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதி மற்றும் வணிக சேவைகளின் வரம்பை விரிவுபடுத்தும் அதே வேளையில், அணுகல் செலவை வியத்தகு முறையில் குறைத்துள்ளது. பணப்பரிவர்த்தனை அளவின் அடிப்படையில், யு.பி.ஐ. உலகின் மிகப்பெரிய இணையவழி கட்டண அமைப்பாகும். மேலும் இது நிதி உள்ளடக்கம், செயல்திறன் மற்றும் கண்டுபிடிப்புகளின் முக்கியமான கருவியாக மாறியுள்ளது. வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுடன் ஒத்துழைப்பதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன. இந்தியா-கனடா இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளன. இருதரப்பு கூட்டாண்மை என்பது மூலதனப் பரிமாற்றங்களைத் தாண்டி ஆழமான நிறுவன ஈடுபாட்டை நோக்கி அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/india-is-the-fastest-growing-major-economy-union-minister-nirmala-sitharaman-is-proud



