துபாய், முதலாவது பெண்கள் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இலங்கையில் அந்த நாட்டு அரசு கிரிக்கெட் வாரியத்தை கூண்டோடு கலைத்து விட்டு இடைக்கால கமிட்டியை அமைத்து நிர்வகித்து வருகிறது. கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை அவர்களிடம் இருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பறித்து விட்டது. இதையடுத்து இந்தியா, வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஒன்றில் இந்த போட்டியை நடத்துவது குறித்து ஐ.சி.சி. பரிசீலித்தது. இறுதியில் இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. இதன்படி பெண்கள் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மும்பை மற்றும் வதோதராவில் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்தி ரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் ஜூலை 6-ந்தேதி நிலவரப்படி தரவரிசையில் டாப்-6 இடங் களை வகித்ததன் அடிப்படையில் தகுதி பெற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/icc-announces-womens-champions-trophy-cricket-in-india




