தஞ்சை, தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வெங்கரை மாஞ்சக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மனைவி பத்மினி (வயது45), சுரேஷ் மனைவி இலக்கியா (35), மகாலிங்கம் மனைவி நிவேதா (30), நிவேதாவின் மகன் சுபாஷ் (4) ஆகிய 4 பேரும் பெரிய கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த ஆனந்தன் (55) ஓட்டிச் சென்ற ஆட் டோவில் கரம்பவிடுதியில் நடைபெற்ற ஒரு வளைகாப்பு விழாவுக்கு சென் றனர். நிகழ்ச்சி முடிந்ததும் 4 வயது குழந்தை உள்பட 5 பேரும் ஊருக்கு திரும்பினர். ஆனந்தன் ஆட்டோவை ஓட்டினார். ஆற்றில் கவிழ்ந்தது ஊரணிபுரம் வெங்கரை சாலையில் வெட்டுவாக்கோட்டை பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் ஏற்பட்டுள்ள ஒரு பள் ளத்தில் ஆட்டோ சென்றது. அப்போது திடீரென டிரைவர் ஆனந்தனின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த கல்லணை கால்வாய் புது ஆற்றில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் பத்மினி மற்றும் ஆட்டோ டிரைவர் ஆனந்தன் இலக்கியா, நிவேதா, 4 வயது குழந்தை சுபாஷ் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். இது குறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-auto-rickshaw-overturns-into-river-5-people-including-a-child-seriously-injured




