‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் 937 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ‘ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’ படத்தின் வசூலை பின்னுக்குத் தள்ளி, வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை பெற்றுள்ளது. 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே'. கடந்த ஜூலை 31ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்வெல்லின் 38-வது திரைப்படமாகவும் 'ஸ்பைடர்மேன்' திரைப்பட வரிசையில் நான்காவது படமாகவும் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. புதிய எதிரிகள், விறுவிறுப்பான அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளால் உலகம் முழுவதும் இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் இந்த நிலையில், ஹாலிவுட்டில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம், வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ‘ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’ திரைப்படம் முன்னிலையில் இருந்தது. இப்படம் வட அமெரிக்காவில் சுமார் 936 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்திருந்தது. ‘ஸ்பைடர்மேன்’ புதிய சாதனை இந்த நிலையில், ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் 937 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ‘ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’ படத்தின் வசூலை பின்னுக்குத் தள்ளி, வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ பெற்றுள்ளது. வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இரு படங்களின் வசூலுக்கும் இடையே சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படத்தின் இந்த வசூல் சாதனை, ஹாலிவுட் திரையுலகில் கவனம் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/a-massive-box-office-rampage-spider-man-overtakes-star-wars




