கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நேற்றோடு (ஆகஸ்ட் 2 ) நிறைவடைத்துள்ளது. இப்போட்டி இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் விதமாக அமைந்துள்ளது. இந்தியாவிலிருந்து 122 வீரர், வீராங்கனைகள் 13 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்ற நிலையில், மொத்தம் 39 பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் பதக்க வேட்டையில் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் குத்துச்சண்டை முக்கிய பங்காற்றின. இந்த இரு பிரிவுகளிலும் தலா 10 பதக்கங்கள் கிடைத்தன. பளுதூக்குதல் பிரிவில் 7 பதக்கங்களும், தடகளத்தில் 6 பதக்கங்களும் இந்தியாவின் கணக்கில் சேர்த்தன. மொத்த பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் கடந்த காமன்வெல்த் போட்டிகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தனது நிலையை தக்க வைத்திருப்பதோடு, சில பிரிவுகளில் முன்னேற்றமும் அடைந்திருக்கிறது. துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். குத்துச்சண்டையிலும் பல பிரிவுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி பதக்கங்களை கைப்பற்றினர். பளுதூக்குதல் மற்றும் தடகளத்திலும் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா 171 பதக்கங்கள் பெற்று முதலிடத்தையும், இங்கிலாந்து 110 பதக்கங்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், கனடா 62 பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இதில் இந்தியா 39 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. காமன்வெல்த் விளையாட்டில் 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்த இந்தியா கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 61 பதக்கங்கள் வாங்கியிருந்தது அதை ஒப்பிடும்போது சில பிரிவுகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை குறைந்திருந்தாலும், புதிய வீரர்களின் எழுச்சியும், பல விளையாட்டுகளில் தொடர்ந்து பதக்கம் வெல்லும் திறனும் எதிர்கால சர்வதேச போட்டிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக விளையாட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/india-finish-commonwealth-games-2026-in-fourth-place-with-39-medals




