சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது என தமிழக பாஜக தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- பெருமைப்பட வேண்டிய நாள் ஒரு கதர் சட்டை அணிந்த காங்கிரஸ்காரனாக நெஞ்சார்ந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் உணரும் நாள்; கதர் சட்டை அணிந்த ஒவ்வொரு காங்கிரஸ்காரனும் நெஞ்சம் நிமிர்த்துப் பெருமைப்பட வேண்டிய நாள்! அண்ணல் 'தீரர்' சத்தியமூர்த்தியின் பிறந்தநாளான இன்றைய நன்னாளில், 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்யும் அமைச்சர் சகோதரர் ராஜேஷ் குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! சட்டமன்றப் பணிகளும் தொடர்கிறது மத்திய பாஜக அரசு மற்றும் அமித் ஷாவை எதிர்த்து மக்களுக்கான நமது அறவழிப் போராட்டக் களம் ஒருபுறம் தொடரும் அதே வேளையில், மறுபுறம் மக்கள் நலனுக்கான நமது சட்டமன்றப் பணிகளும் கம்பீரமாகத் தொடர்கிறது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தங்களது மானியக் கோரிக்கை வழிகாட்டட்டும்! வாழ்த்துகள்! வெல்க மக்கள் பணி! வளர்க தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-historic-moment-in-the-history-of-the-tamil-nadu-legislative-assembly-manickam-tagore




