புதுடெல்லி, கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மூன்று நாள் பயிற்சி, இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை கமாண்டில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இது தொடர்பாக, இந்திய அரசின் பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- பயிற்சி இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளை தடுப்பதை மையமாக கொண்டு, கிழக்கு கடற்படை கமாண்டின் தலைமை பணியாளர் அதிகாரி ரியர் அட்மிரல் மனோஜ் ஜாவின் தொடக்கவுரையுடன் 2026 செப்டம்பர் 09 அன்று இந்த பயிற்சி தொடங்கியது. ஒத்திகை பயிற்சி கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு அமைப்பின் உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் குழுக்களும் கடல்சார் பாதுகாப்பு நிபுணர்களும் 72 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை பயிற்சி, கடல்சார் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல் உள்ளிட்ட சிக்கலான, மரபுசாரா பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தின. கள விழிப்புணர்வு பங்கேற்பாளர்கள், கூட்டு கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை ஆய்வு செய்து, தகவல் பகிர்வு ஏற்பாடுகளை நெறிப்படுத்தினர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/colombo-security-conference-3-day-training-concludes-in-visakhapatnam




