வெயில் காலத்தில் பகல் நேரம் மட்டுமின்றி இரவில் கூட தூங்கமுடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீட்டில் ஏசி, ஏர்கூலர் உள்ளிட்டவற்றை பலரும் வாங்கி மாட்டுவார்கள். கோடை காலம் வந்தாலே ஏசி, ஏர்கூலர்ககளின் விற்பனை ஷோ ரூம்களில் களை கட்டும் இப்படிப்பட்ட சூழலில், "ஏசி வாங்கலாமா? இல்லை ஏர்கூலரே போதுமா?" என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இதற்கான பதில், உங்கள் தேவையையும், பட்ஜெட்டையும் பொறுத்தே அமையும். ஏர்கூலர் இயற்கையான முறையில் குளிர்ச்சியை தருகிறது. வெளியிலிருந்து காற்றை இழுத்து, தண்ணீர் நிரப்பப்பட்ட குளிரூட்டும் தகடுகள் வழியாக அனுப்பி அறைக்குள் வீசுகிறது. அதனால் காற்று சற்று ஈரப்பதத்துடன் குளிர்ச்சியாக இருக்கும். அதிலும் குளிர்ந்த தண்ணீர் அல்லது ஐஸ்கட்டிகளை சேர்த்தால் இன்னும் சில்லென்ற உணர்வு கிடைக்கும். மின்சாரச் செலவும் மிகவும் குறைவு. ஆனால், தண்ணீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் கிருமிகள், பூஞ்சைகள் உருவாகி உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/ac-or-air-cooler-which-is-better-for-the-summer-heat




