சென்னை, இந்திய மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் அதே நாளில் சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தர்மேந்திர பிரதான் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது மாணவர்களின் சார்பில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அறவழிப் போராட்டத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். தர்மேந்திர பிரதான் விலகலையடுத்து அப்பொறுப்பில் கல்வியாளர் ஒருவரைக் கல்வி அமைச்சராக நியமிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். கடந்த திமுக ஆட்சியில் “நீட் தேர்வு தேவையில்லை, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்” எனப் பல ஆண்டுகளாக விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் அதற்காக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அன்றைய கவர்னர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார். நீதிமன்றம் தலையிட்டதால் அதைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அது நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டது. அதை சட்டத்துக்குப் புறம்பாக ஜனாதிபதிக்கு அனுப்பினார். அங்கு அவர் கிடப்பில் போட்டிருந்தார். சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டபின் அதைத் திருப்பி அனுப்பினார். இவை யாவற்றுக்கும் பாஜக அரசே காரணம். ஒரே ஒரு நீதிபதியின் விருப்பம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்குப் பிறகு ‘நீட் தேர்வே வேண்டாம்’ என்ற தமிழ்நாட்டின் நிலைபாட்டை இப்போது மேலும் பல மாநில அரசுகளும், கட்சிகளும் வழிமொழியத் தொடங்கியுள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு முறையை ரத்துசெய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். ஏனெனில், நீட் தேர்வு என்பது அனைத்துத் தரப்பினரின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அல்ல. சுப்ரீம்கோர்ட்டில் அனில் ஆர்.தவே என்ற ஒரே ஒரு நீதிபதியின் விருப்பத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்த ஒன்றாகும். ஆர்ப்பாட்டம் மருத்துவக் கல்வியை பாதுகாக்க நீட் தேர்வை முற்றாக ஒழிப்பதுதான் ஒரே வழி. எனவே, எதிர்வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது இதற்கான சட்ட மசோதாவைக் கொண்டுவந்து சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடந்து வந்த மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும்; நீட் தேர்வை இந்தியா முழுவதும் ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 27 திங்கட்கிழமையன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் தற்போது தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பதால், அந்த ஆர்ப்பாட்டம் அதே நாளில் சென்னையில் மட்டும் எனது தலைமையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இயக்கத்தின் முன்னோடிகள் யாவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhans-resignation-a-massive-victory-for-the-peaceful-protest-vck




