திருச்சியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, "டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வந்தார்கள். திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய வீட்டிலும் என்னுடைய சகோதரர் வீட்டிலும் சோதனை செய்தார்கள். அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. வழக்கமாகப் பயன்படுத்தும் ஒரு கோப்பையும் என்னுடைய சகோதரரின் வரவு செலவு கணக்கு தொடர்பான விவரங்களையும் எடுத்துக் கொண்டார்கள். 8 மணி முதல் 3 மணி வரை சோதனை நடைபெற்றது. ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டு அது தொடர்பாக எழுதி கையெழுத்து வாங்கி உள்ளார்கள். நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினோம். அவர்கள் கூறுவது போல் டெண்டர் தொடர்பாக நான் யாரிடமும் பேசியது கிடையாது. வழக்கு தொடர்பாக அடுத்து என்ன கூறுகிறார்களோ அதைக் கேட்டு சட்டப்படி சந்திப்போம். லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே ஒரு வழக்கு என்மீது பதிவு செய்துள்ளார்கள். அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அது குறித்து அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்று நாங்கள் நிரபராதி என்பதை நிரூபிப்போம். சட்டசபையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால் என்னை மிரட்டுவதற்காகக்கூட இது போன்ற சோதனை அவர்கள் செய்யலாம். kn neru அரசை அடிக்கடி நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் என செய்தியாளர்கள் என்னிடம் சொல்வது எனக்கு பெருமையாக உள்ளது. இந்தச் சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான். சட்டசபையில் ஒன்றிய அரசு குறித்து அமைச்சர் வன்னியரசு பேசிய கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது, ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒற்றுமையாக இருப்பதைக் காட்டுகிறது. மத்திய அரசிடம் எந்தக் கெட்ட பெயரும் ஆகி விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு செயல்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே, முதல்வராக இருந்தவர்கள் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது இரண்டு முறை என் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தார்கள். தற்பொழுது, மூன்றாவது முறை சோதனை நடைபெற்றுள்ளது. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் என்னிடம் பேசினார். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தினார்" என்றார். திருச்சி: கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; வீட்டின் முன் குவிந்த திமுகவினர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/dmk-ex-minister-kn-nehrus-clarification-about-raid




