புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 3-வது கட்டமாக நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக பீகாரிலும், அடுத்தகட்டமாக தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடந்தது. 3-வது கட்டமாக மீதமுள்ள 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நடக்கிறது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் பணிகள் முடிக்கப்பட்டு இறுதி வாக்காளர்பட்டியலும் வெளியிடப்பட்டன. வாக்காளர்கள் நீக்கம் தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கையில் நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இது எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்க்கு எதிராக எதிர்க்கட்சிகள் வழக்குகள், போராட்டங்கள் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் போராட்டம் மறுபுறம் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பெரும்பாலும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக எடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதுவும் எதிர்க்கட்சிகளிடம் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. எனவே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்து உள்ளன. புதிய வாக்காளர்கள் இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து முடிந்துள்ள மாநிலங்களில் பட்டியலில் இருந்து விடுபட்டவர்கள் மற்றும் நீக்கப்பட்ட தகுதி வாய்ந்த வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட தீவிர இயக்கங்களை உடனடியாக தொடங்குமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த சிறப்பு இயக்கத்தின்போது விடுபட்ட வாக்காளர்கள் மட்டுமின்றி புதிய வாக்காளர்களையும் பட்டியலில் சேர்ப்பதற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. சிறப்பு முகாம்கள் இது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், “வாக்காளர் பதிவு தொடர்ந்து நடைபெறும் ஒரு நடவடிக்கை ஆகும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் விடுபட்டதற்காக எந்த தகுதி வாய்ந்த குடிமகனும் வாக்குரிமையை இழக்கக்கூடாது. எனவே விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும். இந்த சிறப்பு நடவடிக்கையில் முக்கியமாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முந்தைய வாக்காளர் பட்டியலை, வாக்குச்சாவடி அதிகாரிகள் (பி.எல்.ஓ.) தற்போதைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதன்படி தற்போதைய இறுதி வாக்காளர்பட்டியலில் விடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்களை வீடு வீடாக சென்று சந்தித்து விசாரிக்க வேண்டும். வாரத்துக்கு 20 முதல் 25 வாக்காளர் வரை இந்த சரிபார்ப்பை செய்து ஒரு மாதத்துக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும். தகுதி பெற்ற இளம் புதிய வாக்காளர்கள் மற்றும் தகுதியான விடுபட்ட வாக்காளர்களிடமிருந்து பி.எல்.ஓ.க்கள், படிவம் 6 விண்ணப்பங்களை அந்த இடத்திலேயே சேகரிப்பார்கள். அத்துடன் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்காக, இந்தப்பட்டியல்கள் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் நேரடியாகப் பகிரப்படும்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/election-commissions-special-drive-to-enrol-left-out-voters-where-sir-is-over




