'டூரிஸ்ட் பேமிலி' படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த், அதனைத் தொடர்ந்து 'வித் லவ்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதையடுத்து கவுதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிக்காசோ' என்ற படத்தில் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஷிவானி நாகரம், யோகலட்சுமி, கானா வினோத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 'பிக்காசோ' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. விரைவில் படம் திரைக்கு வருகிறது. சிவராஜ்குமாருடன் இணைந்து நடிப்பது குறித்து அபிஷன் ஜீவிந்த் கூறும்போது, "திரையில் பார்த்து வியந்த சிவராஜ்குமாருடன் இணைந்து நடிப்பது என் வாழ்நாள் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம். அவரது அனுபவம் நிச்சயம் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். இது அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழும் படமாக இருக்கும்" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/acting-with-shivarajkumar-is-my-lifelong-luck-abhishan-jeevind




