நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று 34-வது நாளாக சிஜேபி போராட்டம் நீடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை சிஜேபி நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா நேற்று மீண்டும் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து சிஜேபி செய்தித் தொடர்பாளர் கவுரவ் தாஸ், ஜந்தர் மந்தரில் கூறும்போது, “யாருடைய வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் நாங்கள் செல்ல மாட்டோம். எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் ஜந்தர் மந்தருக்கு வரலாம் அல்லது பொதுவான ஓரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம்" என்றார். அமைச்சரவைக் கூட்டம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இன்று மத்திய அமைச்சரவைக்கூட்டம் நடைபெறுகிறது. நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்று கூறினார். எனவே இன்று நடைபெறும் கேபினட் கூட்டத்தில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/key-decision-on-the-neet-question-paper-leak-issue-union-cabinet-meets-urgently-today




