சாண்டியாகோ, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் பயோபயோ மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை, வெள்ளத்தால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3 பேர் பலி இந்நிலையில், சிலியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பல்வேறு இயற்கை பேரிடர்களில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் மரம் முறிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை, கனமழை, வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கனமழை, வெள்ளத்தால் பயோபயோ மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு அதிபர் ஜோஷ் அண்டனி கஸ்ட் நேரில் பார்வையிட உள்ளார். மேலும், மீட்புப்பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பலத்த காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/heavy-rain-floods-in-chile-3-killed




