தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க. அறிவித்தது.இந்த திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்தார். அதன்படி, 22.6.2026 அன்று முதல் தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட இருக்கிறது.தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக, தமிழகம் முழுவதும் 107 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கு தங்க மோதிரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. விஜய் வருகை முதல் தவணையாக இதற்காக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன.இந்தநிலையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில், முதல்-அமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) நேரடியாக வந்து தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனிவிமானத்தில் மதுரைக்கு விஜய் வருகை தந்தார். ரோடு ஷோ மதுரை விமான நிலையத்தில் முதல் அமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள், அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரை வழிநெடுக மக்கள் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தபடி முதல் அமைச்சர் விஜய் வந்தார். முதல் அமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு வழிநெடுக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருதது. ரோடு ஷோ'வாக பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக முதல் அமைச்சர் விஜய் வருகை தந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-leader-vijay-arrives-in-madurai-party-cadres-give-him-an-enthusiastic-welcome




