விருதுநகர், விருதுநகர் மாவட்டத்தில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் முத்தாலம்மாள். இவருடைய மகள் காயத்ரி (வயது 22). இவருக்கும் மதுரை மாவட்டம் சாப்டூரை சேர்ந்த ஜெயசீலன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் இந்த தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து 2-வதாக கர்ப்பம் அடைந்த காயத்ரி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 12 நாட்களுக்கு முன்பு அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பெண் தூக்குப்போட்டு தற்கொலை இந்த நிலையில் திடீரென வீட்டில் மின்விசிறியில் அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-woman-who-gave-birth-to-twins-commits-suicide-by-hanging




