அம்மாபேட்டை, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து நள்ளிரவு வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அம்மாபேட்டை அடுத்த பூதப்பாடி கிராமம் அண்ணா நகர், பூனாச்சி, கெம்மியம் பட்டி, பட்லூர், முளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாழைத்தோட்டங்கள் உள்ளன. வாழை மரங்கள் சூறைக்காற்று வீசியபோது மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த செந்தில்குமார் (வயது 43), வேலுச்சாமி(73), காவிரி(76), பரிமளா(56), மூர்த்தி(62), பூனாச்சி ஈசன் உள்பட பல்வேறு விவசாயிகளின் தோட்டங்களில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:- 7 மாதங்கள் வளர்ந்திருந்த நேந்திரன் வாழைகள் குலை தள்ளும் நிலையில் இருந்தன. உரம், மருந்து, தொழிலாளர்களின் கூலி என அதிக தொகை சாகுபடிக்கு செலவு செய்துள்ளோம். இந்த நிலையில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் அடியோடு சாய்ந்து நாசமாகின. இதனால் எங்களுக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-accompanied-by-gale-force-winds-in-the-ammapettai-area-10000-banana-plants-damaged




