திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு 30 மணி நேரம் வரை ஆவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 73 ஆயிரத்து 265 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் 39 ஆயிரத்து 690 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.4 கோடிேய 26 லட்சம் செலுத்தப்பட்டு இருந்தது. 4 லட்சத்து 9ஆயிரம் லட்டுகள் விற்பனையாகின. 2 லட்சத்து 98 ஆயிரம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றனர். 3 ஆயிரத்து 899 பேருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பியுள்ளன. நீண்ட வரிசை தரிசன வரிசையானது பாட்டா கங்கம்மா, ஆக்டோபஸ் கட்டிடம் மற்றும் பச் சிக்கல்வா கங்கம்மன் கோவில் வரை நீண்டுள்ளது. இந்த வரிசையில் உள்ள பக்தர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். எஸ்.எஸ்.டி.டோக்கன் இல் லாத சர்வதரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 24 முதல் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/devotees-wait-30-hours-for-darshan-at-tirupati




