கொல்கத்தா, இந்தியா - பிரேசில் அணிகள் இடையே சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது. 5 முறை உலக சாம்பியனான பிரேசில் உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக் கிறது. இந்தியா 138-வது இடம் வகிக்கிறது. இவ்விரு அணிகள் சர்வதேச போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும். பிரேசில் அணியில் வினி சியஸ் ஜூனியர், கேப்ரியல் மகால்ஹேஸ், புருனோ குயிமோரஸ் போன்ற நட் சத்திர வீரர்கள் இடம் பெற்றிருப்பதால் அவர்களின் ஆட்டத்தை காண இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதே சமயம் காயத்தால் ரபின்யா ஆடவில்லை. இந்திய அணி குர்பிரீத் சிங் சந்து தலைமையில் களம் இறங்குகிறது. சமீபத்தில் பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் டிரா செய்த இந்தியா கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடும். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/football/international-football-match-india-and-brazil-to-clash-today




