பர்மிங்காம், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமன் ஆனது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.இந்த நிலையில், 3வது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். வாஷிங்டன் சுந்தர் விளையாடாததால் இந்திய அணியில் நாளைய போட்டியில் சுழற்பந்துவீச்சாளார் குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/3rd-odi-chance-for-kuldeep-yadav-to-play




