தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து தீவிரமாகப் பேசிவருகிறார். காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் இந்நிலையில், நேற்று (செப்.28) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ் மோகன், ``தேர்தல் ஆணையர் மாற்றம் தொடர்பான விவகாரத்தில், வெறும் தனிநபர் ஒருவரை மாற்றுவதால் மட்டும் எந்தப் பயனும் விளையாது என்பதே தமிழக வெற்றித் கழகத்தின் நிலைப்பாடாகும்" என்று கூறியிருந்தார். ராஜ்மோகனின் இந்தப் பேச்சு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. "2 நாள்களில் 9 கொலைகள்; முதல்வர் 'மிக்சர்' சாப்பிடாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" - உதயநிதி இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் தனது எக்ஸ் தளப் பதிவில், “வாயைத் திறந்து உங்கள் அறியாமையை வெளிப்படுத்துவதை விட, சில சமயங்களில் அமைதியாக இருப்பதே சிறந்தது” என்று பதிவிட்டிருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்மோகனிடம் மோகன் குமாரமங்கலத்தின் பதிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. ராஜ்மோகன் - தவெக அதற்கு பதிலளித்த அவர், " கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு தான் எங்களின் நிலைப்பாடு. SIR-ஐ முதல் நாளில் இருந்து எதிர்த்து வருகிறோம். இப்போது வரைக்குமே SIR-ஐ நாங்கள் எதிர்க்கிறோம். நான் அவர்களை (காங்கிரஸ்) குறிப்பிடவில்லை. மோகன் குமாரமங்கலம் எனக்கு தோழர். காங்கிரஸ் கட்சியும், தவெகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள்" என்று விளக்கம் அளித்திருக்கிறார். ராஜ்மோகனின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, " சகோதரத்துவம் மலரட்டும், தொடரட்டும்" என்று மோகன் குமாரமங்கலம் பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/minister-rajmohan-clarifies-sir-statement




