அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் 17-ம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின், அவ்வப்போது தாக்குதல் நடந்தாலும், தற்போது முழு நேர போர் தொடங்கியுள்ளது. துருக்கியில் நடக்கும் நேட்டோ மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் முடிந்துவிட்டது' என்று கூறியிருந்தார். அதன் பின், இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்தன. இந்த நேரத்தில் ஈரான் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடுகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்"அவர்கள் பொய்யர்கள்; ஈரான் போர் நிறுத்தம் முடிந்துவிட்டது" - ட்ரம்ப் அதிரடி பேச்சில் சொல்வதென்ன? ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத்தின் அமெரிக்காவின் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப், "நேற்று ஈரான் நடத்திய கப்பல் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் தொடர்ந்தால், நிலைமை இன்னும் மோசமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார். "ஈரானின் தென்கிழக்கு நகரமான இரான்ஷாரில் உள்ள 'இரான்ஷார் விமான நிலையம்/விமானப்படைத் தளத்தை' இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை உள்ளூர் அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் தளத்தை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல்படையின் விண்வெளிப் பிரிவு (IRGC-AF) ஓரளவுக்குப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது" என்கிற பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்காவின் ராணுவ பிரிவுகளில் ஒன்றான மத்தியக் கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில். "அமெரிக்கப் படைகளின் தலைமைத் தளபதியின் (அதிபர்) உத்தரவின் பேரில், ஹார்முஸ் நீர்ச்சந்தி சர்வதேசக் கடல் வழிப் போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் ராணுவத் திறனை மேலும் முடக்குவதற்காக, அமெரிக்க மத்தியக் கட்டளையகப் படைகள் ஈரான் மீது கூடுதல் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளன. முக்கிய சர்வதேச நீர்வழித்தடத்தில் எவ்வித தடையுமின்றிச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மற்றும் அதன் சிவிலியன் ஊழியர்கள் மீது அண்மையில் ஈரான் நடத்திய தேவையற்ற ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு, அமெரிக்கா, ஈரானை முழுப் பொறுப்பேற்கச் செய்து வருகிறது" என்று தாக்குதலுக்கான காரணத்தை விளக்கியுள்ளது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய போறீங்களா? - ITR Forms-ல் இந்த மாற்றங்கள் வந்துருக்கு! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/us-launches-fresh-strikes-on-iran-as-conflict-escalates




