சென்னை, தனது திரைப்பயணத்தில் பிசியாக இருக்கும் அதே வேளையில், தனது ரசிகர் நற்பணி மன்றங்களை வலுப்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஷால் தனுஷின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். அதாவது, மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் பிஸி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தனது திரைப்பயணத்தில் பிசியாக இருக்கும் அதே வேளையில், தனது ரசிகர் நற்பணி மன்றங்களை வலுப்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான 'கர' திரைப்படத்தைத் தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ், மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தனுஷ் ஆலோசனை திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்துவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். வாரம் ஒருமுறை மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து, மன்ற செயல்பாடுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். அன்னதானம், ரத்ததானம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற நலத்திட்டப் பணிகளை மன்றங்கள் மூலம் தனுஷ் மேற்கொண்டு வருகிறார். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உத்தரவு இந்த நிலையில், மன்றத்தை வலுப்படுத்தவும், உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தனுஷ் தரப்பில் புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் மட்டுமல்லாது, தொகுதி வாரியாகவும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட தொகுதிகளில் நற்பணி மன்றங்களைத் தொடங்கி, புதிய உறுப்பினர்களை அதிக அளவில் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்பட்டாலும், தனுஷின் இந்த அதிரடி மாற்றங்கள் அரசியல் களத்தில் அவரது முதல் அத்தியாயமா? என்ற கேள்வி தற்போது பேசுபொருளாகியுள்ளது. நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார். விஷால் கூறியதாவது; தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாக பல்வேறு பேச்சுகள் வந்து கொண்டிருக்கிறது. அவர் அப்படி ஒரு முடிவை எடுத்து இருந்தால் முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் சேவை என்பது சாதாரண விஷயம் இல்லை. தனுஷ் சிறந்த நடிகர், இயக்குநர், அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ் சினிமா மேலும் ஒரு சிறந்த நடிகரை இழக்கும்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-vishal-makes-sensational-remarks-about-dhanush-entering-politics




