தென்காசி, தென்காசியில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழகத்திலிருந்து ஒருவர் வர வேண்டும் என்பது அனைவரும் ஆசைப்படக் கூடிய ஒன்றுதான். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. காலக்கட்டத்துக்கு ஏற்றார்போல இயற்கையே ஒரு விஷயத்தை உருவாக்கும். இதனால் எங்கள் கூட்டணியில் எந்த முரணும் இல்லை. உங்களுக்கெல்லாம் சுவாரஸ்யம் வேண்டும் என்பதற்காக தினமும் இதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கடந்த ஆண்டு இதே நேரத்தில், தவெக ஆட்சிக்கு வரும் என்று நாங்கள் சொன்னதற்கு அனைத்து பத்திரிகைகளும், கருத்துக் கணிப்புகளும் என்ன சொன்னது? ஆனால், எங்கள் தலைவர் முதல்வராவார் என நாங்கள் ஆணித்தனமாக சொன்னோம். இயற்கை தானாகவே ஒன்றை உருவாக்கும். அதுவரைக்கும் இதுபற்றி நாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டாம். இன்னும் மூன்று, நான்கு ஆண்டுகள் உள்ளன. இவ்வாறு நீங்கள் கேள்வி கேட்பதால்தான் இது பெரிய விஷயமாக உருவாக்கப்படுகிறது. யாருக்கோ தீனி போடவெல்லாம் இதைக் கேட்க வேண்டாம். இதனால், கூட்டணிக்குள் எந்தக் குழப்பமோ பிரச்னையோ இல்லை. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-confusion-or-problem-within-our-alliance-minister-nirmal-kumar




