நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 'பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026', மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறப்பட்டது. பொதுத் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026'-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் காரசாரமாக நடைபெற்றது. இந்நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் சட்டத் திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.50 லட்சம் வரை அபராதமும், முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இந்த 'பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026'-வில் இடம்பெற்றுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/public-examinations-prevention-of-unfair-means-amendment-bill-2026-passed-in-parliament




