நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்தும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் 21-ந் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக மாறியது. சுப்ரீம் கோர்ட்டு அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடும் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்.அதே நேரத்தில், போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் போலீசார் தரப்பிலும் பலர் காயமடைந்தனர். மாணவர்கள் போராட்டத்தின்போது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று புகார் அளிப்பதற்காக நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்தார். காவல் நிலையத்தில் தர்ணா இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக ராகுல் காந்தி புகார் அளித்தார். மேலும், போராட்டத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவரையும் அவர் தன்னுடன் அழைத்து வந்திருந்தார்.புகார் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, காவல் நிலையத்திலேயே ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் தர்ணாவில் கலந்து கொண்டனர். இளைஞர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தர்ணாவால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/rahul-gandhi-and-priyanka-stage-a-sit-in-at-the-police-station-stir-in-delhi




