சென்னை, ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்குகளின் டிஜிட்டல் சான்றுகளை விரைந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- போக்சோ ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய டிஜிட்டல் சான்றுகள் குறித்து காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில், எவ்வித அதிகாரத் தலையீடோ வெளித் தாக்கமோ இன்றி, அறிவியல் மற்றும் சட்டரீதியான ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே புலனாய்வு அமைவது தலையாய கடமையாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் சமூகச் செல்வாக்கு, பணபலம், பதவி ஆகியவற்றுக்கு இடமில்லை. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமின்றி, இதற்குத் துணைபோனவர்கள், மறைமுகமாகத் தொடர்புடையவர்கள் என அனைவரின் பங்கும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு தகுந்த பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். அதேவேளையில், இவ்விகவாரம் தொடர்பாக முன்னதாகப் பெறப்பட்ட புகார்களை உரிய முறையில் விசாரிக்கத் தவறியவர்கள், புலனாய்வில் சுணக்கம் காட்டியவர்கள், ஆதாரங்களைப் புறக்கணித்தவர்கள் அல்லது உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் முடக்கியவர்கள் யார்? என்பதும் தனியாகப் புலனாய்வு செய்யப்பட வேண்டும். தங்களது சட்டப்பூர்வக் கடமையை வேண்டுமென்றே புறக்கணித்ததோ அல்லது ஆதாரங்களைச் சிதைக்க முயன்றதோ தெரியவந்தால், அவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் துறை ரீதியாகவும் குற்றவியல் ரீதியாகவும் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். நேர்மையான புலனாய்வு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், கைப்பற்றப்பட்ட காணொளிகள் மற்றும் மின்னணுச் சாதனங்கள் முறையான தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றுகளின் நம்பகத்தன்மை சட்டப்படி உறுதி செய்யப்பட வேண்டும்.இவ்வழக்கு அரசியல் நோக்கங்களுக்கான தளமாக மாறவும் கூடாது. அதே தருணத்தில் அதிகார பலத்தால் உண்மை குழிதோண்டிப் புதைக்கப்படவும் கூடாது. உண்மையை அறிவியல் சான்றுகள் நிலைநாட்டட்டும். குற்றவாளிகளை நேர்மையான புலனாய்வு அடையாளப்படுத்தட்டும். நீதிமன்றம் உரிய தண்டனையை விரைந்து வழங்கட்டும். கடமை தவறியோருக்கும் சட்டம் தன் பதிலை அளிக்கட்டும். டிஜிட்டல் சான்றுகள் எனவே, ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை உரிய கண்காணிப்புடன் மறுஆய்வு செய்து, டிஜிட்டல் சான்றுகளின் உண்மைத்தன்மையை விரைந்து உறுதிசெய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், முந்தைய கட்டங்களில் இவ்வழக்கை நேர்மையாகக் கையாளத் தவறியவர்கள் மீதும் தயவுதாட்சண்யமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தரப்பிற்கு முழுமையான நீதியைத் தமிழ்நாடு அரசு பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/pocso-case-against-gem-veeramani-digital-evidence-must-be-analyzed-expeditiously-velmurugan




