தந்தை என்பவர் பெற்ற பிள்ளைக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கவசம். ஆனால், மது போதையில் மிருகமாக மாறி, தன் சொந்த 16 வயது மகளையே சீரழித்துக் கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 29.06.2025 அன்று, சிறுமியின் தாயார் வழக்கம்போல் பிழைப்பிற்காக வேலைக்குச் சென்றிருந்தார். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த தந்தை, பெற்ற மகள் என்றும் பாராமல் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் மிருகமாக மாறியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, சிறுமியை மிரட்டி பாலியல் தாக்குதல் செய்துள்ளார். இந்தக் கொடூரத்தால் அந்தச் சிறுமி 3 மாத கர்ப்பமானார். காவல்துறை விசாரணை -போக்ஸோ பாய்ந்தது: சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், விசாரணையில் உண்மை அறிந்து கதறித் துடித்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய புலன் விசாரணை அதிகாரி ஆய்வாளர் சாந்தகுமாரி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். பெற்ற மகளையே சீரழித்த அந்தப் போதை மிருகத்தை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தார். நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர யோகமலர் ஆஜராகி, "பெற்ற மகளுக்கே துரோகம் இழைத்த இந்த மிருகத்தனமான குற்றத்திற்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என வலுவாக வாதாடினார். வழக்கை முழுமையாக விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி ராஜா குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ₹10,000 அபராதம் விதித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/judiciary/pudukkottai-court-sentences-father-to-20-years-for-raping-daughter




